கடற்படையினரின் எம்-16 ரக துப்பாக்கியே வெள்ளைமுள்ளிவாய்க்காலில் கைப்பற்றப்பட்டது
-
இவ் விடயம் 09. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 10:43க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
அண்மையில் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதம் கடற்படையினர் மீதான தாக்குதலில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டது என படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த திங்கட்கிழமை (4) வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எம்-16-ஏ-2 ரக கிறைனைட் செலுத்தியுடன் கூடிய ஆயுதம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரத்தியோக ஆயுதம் என அரசு பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது. ஆனால் அரசின் பிரச்சாரம் பொய்யானது என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1988 ஆம் ஆண்டு திருமலையின் பாலம்போட்டாறு பகுதியில் கடற்படையினர் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது கடற்படையினரிடம் இருந்து விடுதலைப்புலிகள் அதனை கைப்பற்றியிருந்ததாக அவை மேலும் தெரிவித்துள்ளன.