மன்னாரில் சிறீலங்காப் படைகளால் தமிழ்ப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

மன்னார் அடம்பனை சொந்த இடமாக கொண்ட இவர்கள் சிறீலங்காப் படையினரின் போர்காரணமாக இடம்பெயர்து முள்ளிவாய்க்கால் வரைசென்று அங்கிருந்து சிறீலங்காப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் செட்டிகுளம் வதைமுகாமில் அடைக்கப்பட்டிருந்து பின்பு சிறீலங்கா அரசின் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மன்னாரில் கொண்டு சென்று விடப்பட்டுள்ள 61 அகவையுடை செல்லையா பாக்கியம் என்ற வயோதிப பெண் கடந்த ஒருவாரங்களுக்கு முன் மன்னார் அடம்பனில் கால் நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த வேளை அங்குவந்துள்ள 5ற்கு மேற்பட்ட சிங்கப்படைகளால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அடம்பன் பிரதேசத்தில் கொண்டு சென்று விடப்பட்டுள்ள மக்களில் பெருமளவானவர்கள் பெண்கள். இவர்களது குடும்பத்தின் ஆண்கள் ஏற்கனவே செட்டிகுளம் முகாமில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இம்மக்கள் ஆண்களின் உதவிகள் இன்றி சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்.

சிறீலங்காப் படையினரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ள செல்லையா பாக்கியம் மன்னார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, இயலாதி நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பின்பு அனுராதபுரம் மருத்துவமனைக்கு  கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பகுதியில் 58ஆவது டிவிசனை சேர்ந்த படைஅணிகள் நிலைகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தை தொடர்ந்து அடம்பன் பகுதியில் வாழும் தமிழ்மக்கள்அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இவ்வாறு சிறிலங்காப் படையினரால் யாழ்குடாவிலும் வயோதிபப் பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். பாலியல் வல்லுறவு என்பது ஐ.நாவினால் ஒரு போர்க் குற்றமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.