மகிந்தவின் பிரசார கூட்டத்திற்கு பலவந்தமாக மக்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

சிறிலங்காவின் சனாதிபதி தேர்தலுக்கான பிரசார பயணத்தினை யாழில் இருந்து ஆரம்பிக்கும் விதமாக இன்று யாழ்ப்பாணத்திற்கு மகிந்த ராஜபக்ச  வருகை தந்துள்ளார். இவ்வாறு தமிழ் மக்களது வாக்கினை குறிவைத்து யாழ்ப்பாணம் வந்துள்ள கொலை வெறியன் மகிந்தவினது பிரசார கூட்டத்திற்கு மக்களை வலு கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் தமிழின துரோகிகள் தமது விசுவசத்தினை கட்டுவதற்காக மக்களை வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளனர். வடமராட்சி பிரதேசத்தில் இருந்து இவ்வாறு மகிந்தவின் பிரசார கூட்டத்திற்கு பொது மக்கள் வலு கட்டாயமாக ஈ.பி.டி.பி. கட்சியினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். வீதிகளில் சென்ற மக்களையும் கட்டாயபடுத்தி அழைத்துசென்றுள்ளனர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.