இரு தரப்பினரும் இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டும் – சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

human-rightwatch-100_6வன்னியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பில் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

மனிதாபிமான முறையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர் கோரினார்.இதேவேளை, இலங்கையில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதே தமது நிலைப்பாடென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.