தேசியத் தலைவரின் தயார் ஊறணி மருத்துமனையில் அனுமதி!

தமிழீழத் தேசியத் தலைவரின் தயார் பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் சுகையினம் காரணமாக வல்வெட்டி ஊறணி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவனின் இறுதி வணக்க நிகழ்வுகளில் பங்கேற்ற இவர், மன அழுத்தம் மற்றும் உடல் பலவீனம் காரணமாக மருத்துமனையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறீலங்காப் படையினர் இவரைத் தடுத்து வைத்திருந்து விடுவித்தபோது அவர் உடுத்திருந்த புடவையோடு வட்வெட்டித்துறைக்கு வந்தபோது, அக்காட்சி பார்ப்பதற்கே மனதை உருக்குவதாய் இருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எம்மிடம் கருத்துரைத்துள்ளார்.

வயது போனவர்களுக்கே இவ்வாறான நிலை என்றால்? சிறப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்  ஏனையவர்கள் எவ்வாறு வைத்திருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.