யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை – சோமவன்ச அமரசிங்க

யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, மல்வத்து பீடாதிபதிகளிடம் தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் நல்லாட்சியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் நோக்கில் தமது கட்சி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லத் தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதே சகல கட்சிகளினதும் எதிர்பார்ப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
மாற்றத்தை எதிர்பார்க்கும் சகல தரப்பினரும் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டை அபிவிருத்தி அடையச் செய்யும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் தாம் ஆதரவளிப்பதாக மல்வத்து பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் ஊழல் மோசடி மற்றும் அடக்குமுறைகளை மேற்கொள்ளும் தரப்பினரை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.