கறுப்புப் பணத்தை வெளியேற்றும் நோக்கில் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சட்டம் தளர்வு
-
இவ் விடயம் 11. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 11:48க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
கறுப்புப் பணத்தை வெளியேற்றும் நோக்கில் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது
கறுப்புப் பணத்தை வெளியேற்றும் நோக்கில் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சட்டத்தை அரசாங்கம் தளர்த்தியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
சட்டவிரோதமான ஈட்டிய பணத்தை சில நபர்கள் வெளியேற்றுவதற்கு உசிதமான சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய சட்டத்தின் அடிப்படையில் இலங்கையர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்புச்செய்ய முடியும் என ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் பெருந்தொகையான கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தேர்தலில் தோல்வியடையக் கூடும் என்ற அச்சம் காரணமாக சிலர் தமது கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிக்கு ஆசிய நாடுகளில் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இவ்வாறான ஓர் தீர்மானம் எடுக்கப்பட்டதனால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சிலரின் நன்மையை கருத்திற் கொண்டு அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது அவர் குறிப்பிட்டுள்ளார்.