யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளில் 8 பேர் யாழ் போதனா வைத்தியசாலைஅவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பு
-
இவ் விடயம் 11. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 20:30க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தம்மை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளில் மேலும் 4 பேர் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையிலேயே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரையில் இவர்களுடன் சேர்த்து 8 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 பேர் இவ்வாறு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் இருவர் பெண்களாவர். முதல் கட்டமாக மூவரும் பின்னர் ஒருவருமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் நால்வர் அனுமதிக்கப்பட்டதுடன் மொத்தமாக 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.