சிரேஷ்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் நாளை விடுவிக்கப்படவுள்ளார்
-
இவ் விடயம் 11. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 20:59க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நாளை சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளார்.
இவர் நாளை பிற்பகல் 12.30 மணியளவில் பிiணியில் விடுவிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
50 ஆயிரம் ருபாய் ரொக்கப்பிணையில் விடுதலை செய்யப்பட்ட இவருக்காக பிணைப்பணம் செலுத்தப்பட்டும் இவர் விடுதலை செய்யப்படாததைத் தொடர்ந்து அவர் இன்றும் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்படவுள்ளார்.
அவர் இன்று பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்ட போதும் அவரை நாளைய தினமே மீன்டும் நீதிமன்றில் அஜர்படுத்தி பிணையில் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
பிணைவழங்கப்பட்ட ஒருவர் சில காரணங்களால் மறுதினம் விடுதலை செய்யப்படுவது வழமைக்கு புறம்பானது அல்ல என்றாலும் திஸ்ஸநாயகத்தின் வழக்கினைப் பொறுத்தவரையில் அவருக்கு இன்று பிணைவழங்கப்பட்டு நாளைய தினம் விடுதலைப் பெறுவதென்பது ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2008 ம் ஆண்டு மார்ச் மாதம் 7 ம் திகதி பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவருக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ந் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத் தண்டணை வழங்கித் தீர்ப்பளித்தது.
அத்துடன் 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக திஸ்ஸநாயகம் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.