கிளிநொச்சியில் தமிழர் தொல்பொருள் ஆய்வு மையம் ஸ்ரீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டள்ளது
-
இவ் விடயம் 11. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 21:01க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
கிளிநொச்சியில் உள்ள தமிழர் தொல்பொருள் ஆய்வு மையம் ஸ்ரீலங்காப்படையினரால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்டங்களில் காணப்பட்ட தொல்பொருள் ஆய்வுப்பொருட்கள் அனைத்தும் ஒருங்கேசேர்த்து மக்கள் பார்வைக்காக வைப்பதற்காகவும் வரலாற்று சின்னங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் பொருட்டும் தமிழ் மக்களினால் கட்டப்பட்டு வந்த தொல்பொருள் ஆய்வு மையம் ஸ்ரீலங்காப்படையினரால் முறுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை கிளிநொச்சி சென்றுவந்த ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியின் நகர்ப்பகுதியில் பண்பாட்டு மண்டபத்திற்கு அருகில் அமைக்கப்பெற்ற தமிழர் தொல்பொருள் ஆய்வு மையம் ஸ்ரீலங்காப்டையினரால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளதை நேரில் காணமுடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.