செல்லசாமி மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துகொள்வாராயின் 500 மில்லியன் ரூபாவை வழங்க பசில் இணக்கம் தெரிவித்துள்ளார்

அரசாங்கத்தில் இருந்து விலகிய தபால் தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம்.எஸ்.செல்லசாமி மீண்டும் அரசாங்கத்தில் இணைந்தால் அவருக்கு அமைச்சு பதவியும் 500 மில்லியன் ரூபா பணத்தை வழங்க தயார் என ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சா நேற்று (10) செல்லசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேர்வின் சில்வா 200 மில்லியன் பணத்தை நேற்று அதிகாலை செல்லசாமியின் வீட்டுக் கொண்டு சென்றுள்ளதுடன் அரசாங்கத்தில் மீண்டும் இணைந்தால் இந்த பணத்தை இப்போதே வழங்க முடியும் என கூறியுள்ளார்.

செல்லசாமி இதனை நிராகரித்தை தொடர்ந்து, அமைச்சர் மேர்வின் சில்வாவின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பசில் ராஜபக்சா மேற்குறிப்பிட்ட தனது யோசனையை முன்வைத்துள்ளார். இதனை நிராகரித்துள்ள செல்லசாமி, பதவிக்கோ, பணத்திற்காகவே தான் கொள்கை ரீதியாக மேற்கொண்ட தீர்மானத்தில் எந்த மாற்றம் செய்ய போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

செல்லசாமி பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 7 ஆம் திகதி எதிரணியில் இணைந்து கொண்டார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.