கள மருத்துவமனை என்ற போர்வையில், திருமலையில் முகாம் ஒன்றை நிறுவுவதற்கு இந்தியப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராணுவ மருத்துவ குழுவை அங்கு அனுப்ப இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் 50 பேர் அடங்கிய இந்த குழு அடுத்த வாரம் 2 விமானங்களில் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களுடன் கொழும்பு செல்ல உள்ளது. அங்கிருந்து வாகனங்கள் மூலம் திருகோணமலையில் உள்ள புல்மோடை என்ற இடத்துக்கு சென்று, அங்கு தற்காலிக மருத்துமனை அமைக்கப்பட உள்ளது.
இந்த தற்காலிக வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை அறை, தீவிர சிகிச்சை பிரிவு, ஆய்வுக்கூடம் ஆகியவை அமைக்கப்படும். சுமார் 3 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் இந்த மருத்துமனைக்காக இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன. இந்திய மருத்துவ குழுவுக்கும் மருத்துமனைக்கும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.