டென்மார்க்கில் வணக்கநிகழ்வும் பேரவையின் பொதுக்கூட்டமும்

ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் 2009 மே 18 ஆம் நாளும்.
அதன் பின் தொடரும் மானிடப் பேரவலங்களின் எதிரொலியாக டென்மார்க்கில் வாழும் ஈழத்தமிழ்மக்களையும் அவர்கள் மேல் கரிசனையுள்ள அனைவரையும்  இணைத்து ஈழுத்தமிழ் மக்களின்
அரசியல் அபிலாசைகளை இடித்துரைக்க அமைக்கப்பட்ட அமைப்பான டென்மார்க் தமிழர் பேரவையின் முதலாவது பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொதுகூட்டம் சிறிலங்கா சிறையில் சாவடைந்த தமிழீழத்தேசியத் தலைவரின் தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளளை அவர்களுக்கான வணக்க நிகழ்வுடன் ஆரம்பமானது.

தமிழர் பேரவை அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் கடந்த சில மாதங்களாக ஆர்வலர்களால் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிமுக ஒன்றுகூடல்கள் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டது.

அறிமுக ஒன்றுகூடல்களில் மக்கள் கொடுத்த ஆலோசனைகள், அறிவுரைகளை ஆதாரமாகக்கொண்டு பேரவைக்கான
யாப்பு தாயரிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல நூறு மக்களின் மீள் பார்வைக்கு வைக்கப்பட்டு அங்கீரம் பெறப்பட்டது.

இழந்த தமிழீழத்த்pன் இறைமையை சனநாயக வழியில் மீளப்பெற்று தமிழீழ தனியரசை மீள் நிறுவதே
தாகமாக கொண்டு எழுச்சியுணர்வுடன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தமிழர் பேரவையின் எதிர்கால செயற்பாடுகளுக்கு தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கியிருந்தனர்.

கடுங்குளிர் மற்றும் கடும் பனி காரணமாக போக்குவரத்து பாதைகள் இடராக இருந்த போதும், ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் கலந்து கொண்டமையால்
மண்டபத்தில் இருக்கைகள் போதாததால் மக்கள் பல மணிநேரம் நின்றே கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலையை யாராலும் தடுக்கமுடியாது, தமிழர் தாயகம் யாருக்கும் அடி பணியாது என்பதையே மக்களின் உணர்வுகளில் காணக்கூடியதாக இருந்தது.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.