ஓசானிக் கப்பலில் வந்த இரு குழந்தைகளும் ஒரு தாய் உட்பட நால்வருக்கு விசா வழங்கப்படமாட்டாது: அவுஸ்திரேலியா

அண்மையில் ஒசானிக் வைகிங் கப்பலில் வந்திருந்திருந்த தமிழ் அகதிகளில் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துவரப்பட்ட நான்கு பேருக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அவுஸ்திரேலிய வதிவிட அனுமதி வழங்கமுடியாதென அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சு அறிவித்துள்ளது.

ஓசானிக் கப்பலில் வந்து இந்தோனிசியாவில் தரையிறங்கிய குறிப்பிட்ட அகதிகள் அனைவருக்கும் உரிய அடைக்கல வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுமென ஏற்கனவே அவுஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி கட்டம் கட்டமாக அவர்கள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

ஆனால் அவர்களில் இரண்டு குழந்தைகள் அவர்களது தாய் மற்றும் இன்னொருவருக்கு அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாமென அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கான புலனாய்வு நிறுவனம் (ASIO) எச்சரித்ததை தொடர்ந்து அவர்களுக்கான வதிவிட அனுமதியை வழங்க முடியாதென அந்நாட்டின் குடிவரவு அமைச்சு முடிவு செய்துள்ளது.

எனினும் ஐநா சட்டவிதிகளுக்கு அமைவாக அவர்கள் நான்கு பேரும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் எனவும் அதனால் அவர்களுக்கான மாற்று ஒழுங்குகள் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.