யாழில் சக்தி தொலைகாட்சி அலை வரிசையினை அரசு நிறுத்தியதனை எதிர்த்து ஊர்வலம்
-
இவ் விடயம் 13. 01. 2010, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 5:38க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
யாழ் குடா நாட்டில் சக்தி தொலைகாட்சி சேவையின் அலைவரிசயை அரசாங்கம் நிறுத்தியதனை கண்டித்து இன்று யாழ்ப்பானத்தில் ஓர் அமைதி ஊர்வலம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. யாழ் நீதி மன்றம் முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் வாயில் கறுப்பு துணிகளை கட்டி மெளன ஊர்வலம் ஒன்றினை நடாத்தினர்.
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சக்தி ஊடகம் பல சேவைகளை வழங்கியதாகவும் ஆனால் தேர்தலினை மையமாக வைத்து அரசாங்கம் திட்டமிட்டு சக்தி தொலைகாட்சி அலைவரிசையினை நிறுத்தி அதே அலை வரிசையில் வடக்கின் வசந்தம் நிகழ்ச்சியினை ஒளிபரப்புவதாகவும்.
இதனை தாம் கண்டிப்பதுடன் மீண்டும் அந்த அலைவரிசையினை அனுமதிக்க வேண்டும் என்றே இந்த ஊர்வலம் நடத்தப்பட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.