தபால்மூல வாக்கெடுப்பில் 4,01,118 வாக்குகள் பதிவாகியுள்ளது – பஃப்ரல்

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகார முறைமைமிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தபால்மூல வாக்கெடுப்புக்களின் முதல் கட்டமாக 4 லட்சத்து ஓராயிரத்து 118 செல்லுபடியாகும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்கெடுப்புக்காக நேற்றைய தினமும் இன்று 13ஆம் திகதியும் தேர்தல்கள் செயலகத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. முதற்கட்டமான நேற்றைய தினத்தில் அதிகபட்சமாக 47 ஆயிரத்து 937 வாக்குகள் குருணாகல் மாவட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகக் குறைந்தபட்சமாக வவுனியா மாவட்டத்தில் 4,069 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.