யுத்த பிரதேசங்களில் மக்களின் அவலம் குறித்து ஐ.நா அவதானம்-நவநீதம்பிள்ளை

nava-200யுத்தம் இடம்பெற்றுவரும் பிரதேசங்களில் பொதுமக்கள் எதிர்நோக்கிவரும் அவலங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் ஏனைய கிளை அமைப்புக்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தனது முதலாவது அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் வழங்கியுள்ள உத்தரவாதத்தை வரவேற்பதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார். யுத்தத்தில் ஈடுபட்டுவரும் சகல தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்பை முதன்நிலைப்படுத்தி செயற்பட வேண்டுமெனவும் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக உருவாகியுள்ள அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள், தண்டனையிலிருந்து தப்பித்தல் போன்ற சகல பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.