டப்ளின் விசாரணை நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது
-
இவ் விடயம் 15. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 4:15க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறும் விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முற்று முழுதாக நிராகரித்துள்ளது.
நிலையான இலங்கை மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பினால் நடத்தப்படும் விசாரணைகளினால், நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாறாக இந்த விசாரணைகளின் மூலம் நாட்டின் ஸ்திரத் தன்மைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான விசாரணைகள் நடத்தப்படுகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசாரணைகள் நடத்தப்படும் காலத்தை உன்னிப்பாக அவதானித்தால் இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் நோக்கம் புலப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தெரிவு செய்யப்பட்ட சில நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணைக் குழு செயற்பட்டு வருவதாகவும், இதில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.