மேனன் முதல் அமைச்சர் கருணாநிதி ஈழத் தமிழர் பற்றி கலந்தாலோசனை

ஈழத் தமிழ் மக்கள் விவகாரம் பற்றி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் ஆலோசனை நடாத்தியுள்ளதாக இந்து செய்தி  வெளியிட்டுள்ளது.

இன்று இவ் சந்திப்பு இடம் பெற்றுள்ளமாகவும் மேனன் தனது பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் மேற்கொண்ட முதல் சந்திப்பு இது என தெரிவித்துள்ள இந்து சந்திப்பின் பின்னர் மேனன் பத்திரிகையாளருக்கு கருத்து வெளியிடுகையில் தாம் தமிழ் மக்கள் பிரச்சினை பற்றி சிறீலங்கா அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும்.இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் மற்றம் மீள் கட்டுமானம் என்பனவற்றுடன் அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய அதிகார பரவலாக்கல் என்பன உள்ளடங்கலாக தமது வேலைத் திட்டம் அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதன் போது முதலமைச்சர் இந்திய மீனவர்களின் நிலைமை மற்றும் இடம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் நிலை பற்றி கரிசணை வெளியிட்டதாகவும் இதற்று தம்மால் முடிந்தவற்றை தாம் செய்வோம் என மேனன் உறுதி அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரை சிறீலங்கா உச்சக்கட்டமாக மேற்கொண்டு இருக்கையில் சிறீலங்காவிற்கு ஏற்பட்ட சர்வதேச அழுத்தங்களை தவிர்ப்பதில் முன்னின்று உழைத்தவர்களில் நாராயணனுக்கு அடுத்த படியாக மேனன் தமிழ் மக்களால் பார்க்கப்படுவது அனைவரும் அறிந்தது.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.