பொன் சேகா அடித்த தளபதியே பொன் சேகாவை பழிவாங்கினார்
-
இவ் விடயம் 01. 02. 2010, (திங்கள்),
தமிழீழ நேரம் 18:57க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
அண்மையில் பொன் சேகாவை Trans Asiaஹோட்டலில் ஆயிரம் சிறப்பு படைகள் முற்றுகையில்
வைத்திருந்தனர் .இந்த முற்றுகையை முன் நின்று கட்டளை இட்டு வழிநடத்திய கட்டளை தளபதி
Brigadier Manawadu ஆவர் .
இவருக்கு இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் பொன்சேகா தவறான தகவலை வழங்கியதன் அடிபடையில் அவரது அணியில் 117படையினர் பலியாகினர் .இந்த இழப்பு இவரது தவறான கட்டளை வழங்க ளினாலேயே நடைபெற்றதாக கூறி பொன்சேகா அவருக்கு தண்டனை வழங்கினார் .
அதையடுத்து தற்போது சானாதி பதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பொன்சேகாவை பழி வாங்க மகிந்தா துடித்தார் .அதற்கு பொன்சேகாவால் பழி வாங்கப்பட்ட Brigadier Manawadu வை ஹோட்டல் முற்றுகைக்கு மகிந்தா அவருக்கு எதிராக பாவித்தார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது .இரானுவதிட்குள் பொன்சேகா மகிந்தா ஆதரவாளர்கள் என இரு பிரிவு செயல்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது .இதனால் இரானுவதிட்குள் பலத்த அடிதடி உருவாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது