அன்பான தமிழ் உறவுகளுக்கு……

எமது இணையத்தளம் சில விசமிகளின் செயல்ப்பாடுகளால் கடந்த சில வாரங்களாக தடைப்பட்டு இருந்ததென்பதினை உங்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம். இதை நிவர்த்தி செய்வதற்க்காக மிகவும் கடுமையான போராட்டத்தின் மத்தியில் மீண்டும் இன்றில் இருந்து எமது இணையத்தளம் செயற்ப்பட ஆரம்பித்துள்ளதென்பதை அறியப்படுத்துவதுடன், புலம்பெயர் தமிழீழ மக்களுக்கும், தாயகத்தில் விடுதலை வேண்டி நிற்க்கும் தமிழீழ மக்களுக்கும், தமிழ் நாட்டு தமிழக உறவுகளுக்கும் நெருடல் இணையம் இன்றய நாளில் மிகவும் முக்கிய செய்தி ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றது.

உங்களது தாயகம் நோக்கிய பயணத்தை மன சோர்வின்றி மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றது. காலம் கனிந்து வரும் போது நெருடலின் இந்தக் கூற்று சரியான பதிலை அளிக்குமென்று எதிர்வு கூறுகின்றது.

தலைவர் மேதகு. வே. பிரபாகரனையும், தமிழீழ புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானையும், ஏனய படையணி தளபதிகள், நிர்வாகிகளையும், அனைத்துலகத்தின் தொடர்பக பொறுப்பாளர் காஸ்ட்ரோ அவர்களது நிர்வாகத்தினையும் விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டு, எமது தலைவர் அவர்களின் சிந்தனையின் படி தமிழீழ தனியரசு நோக்கி நகரும் படி நெருடல் இணயம் அனைத்து தமிழ் மக்களையும் தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றது.

மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள நெருடலுடன் இணைந்திருங்கள்.

நன்றி
நெருடல் குழுமம்

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.