எவருக்கும் அதிக பிரசாரம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பத்திரிகை ஆசிரியர்களுக்கு உத்தரவு

ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பின்றி எந்த அமைச்சருக்கும் அதிக பிரசாரம் வழங்க வேண்டாம் எனவும் அது ஜனாதிபதியின் உத்தரவு எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மகிந்த இளையப்பெரும பத்திரிகை ஆசிரியர்களுக்கு நேற்று அறிவித்திருப்பதாக பிரபல வார ஏட்டின் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியலும் அதற்கான தகவல்களையும் தினமும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இளையப்பெரும கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் பிரதமர் பதவியை பசிலுக்கு வழங்குவதில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் சிரேஸ்ட அமைச்சர்களை புறந்தள்ளும் நடவடிக்கையொன்று ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இதில் சிக்கியுள்ளனர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.