சட்டம் தன் கடமையைச் செய்கிறது. தமிழனாய், நான் என் கடமையைச் செய்கின்றேன் – சீமான்

seeman22சட்டம் தன் கடமையைச் செய்கிறது. தமிழனாய், நான் என் கடமையைச் செய்கின்றேன் எனத்தெரிவித்தார் இயக்குனரும், தமிழுணர்வாளருமாகிய சீமான். இன்ற புதுச்சேரி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சீமானிடம், உங்கள் கைது, காவல் நீடிப்பு, குறித்து என்ன கருதுகின்றீர்கள் எனக்கேட்டபோபதே அவர் இவ்விதம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த போது, இயக்குநர் சீமான் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அங்கு பேசிய போது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, சீமானைக் கைது செய்யப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், 15நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி இடப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பெரில், புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் சீமான்.

இன்றுடன் அந்த நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதியால் சீமானுக்கு வரும் 20 ம் தேதி வரை காவல் நீடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.