சாலை பகுதியை ஊடறுத்து தாக்கிய விடுதலைப் புலிகள்: கொழும்பு ஊடகம்

cசிறிலங்கா இராணுவத்தின் 55 ஆவது டிவிசன் படையணியின் பின்தளப் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் ஊடறுத்து தாக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலையின் தென்பகுதியில் கடுமையான சமர் நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் அணிகள் அலை அலையாக ஊடறுத்து தாக்குதலை நடத்தியுள்ளர்.

55 ஆவது படையணியின் பின்னணி நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நிலைகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

சாலைப் பகுதியில் 55 மற்றும் 58 ஆவது படையணிகள் இணைப்பை ஏற்படுத்தியிருந்த புள்ளியை மையப்படுத்தியே விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடைபெற்றது.

இத்தாக்குதலில் இரு தரப்பிலும் ஏற்பட்ட சேதங்கள் குறித்தான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அது தொடர்பான தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.