நவனீதம்பிள்ளை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் – விமல் வீரவன்ச
-
இவ் விடயம் 06. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 12:44க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
நவனீதம்பிள்ளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆண்டறிக்கையை சமர்பித்து உரையாற்றிய போது நவனீதம்பிள்ளை, இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார்.
பிணமாகக் கிடக்கும் பயங்கரவாதத்திற்கு உயிரூட்ட நவனீதம்பிள்ளை மற்றும் சில மேற்குலக நாடுகள் முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றி முழு உலகமும் அடைந்த வெற்றியாக கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக வெளிநாட்டு சக்திகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தேசப்பற்றாளர்கள் அணி திரள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.