தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களின்  அடிப்படையில் ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரித்து வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

ஒஸ்லோவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனும் இந்கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இந்த இணக்கப்பாடு காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் நோர்வே அரசாங்கத்தின் தலையீட்டுடன் கூடிய எந்தவொரு தீர்வுத் திட்டத்திற்கும் இணங்கப் போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.