இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்,கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய, பிரிஸ்பேனில் உள்ள கத்தோலிக்க நீதி மற்றும் சமாதான ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் ஆடைக்கோட்டா வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக்கொண்டமையை அடுத்தே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆணைக்குழுவின் நிறைவேற்று அலுவலர் பீட்டர் ஆன்ட், இது தொடர்பில் கருத்துரைக்கையில், இலங்கை, உண்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களை இழந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் மேற்கத்தைய நாடுகளுடன் இணைந்து அவுஸ்திரேலியாவும், இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடும் தொனியில் குரல் கொடுக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.