சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரதம்
-
இவ் விடயம் 07. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 18:24க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தொலைபேசி ஊடாக தமது பிள்ளைகளுடன் உரையாட அனுமதி வழங்குமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதனை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள தமது மகள்மாருடன் உரையாடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
இந்தக் இக்கோரிக்கை நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதத்தினை ஜெனரல் சரத் பொன்சேகா தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.