அயர்லாந்து தலைநகர் டப்ளினில் My Daughter the Terrorist (எனது மகள் பயங்கரவாதி) எனும் திரைப்படம் காண்பிக்கப்பட்டது
-
இவ் விடயம் 08. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 22:03க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை My Daughter the Terrorist (எனது மகள் பயங்கரவாதி) எனும் திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சியாக காண்பிக்கப்பட்டது. நோர்வே படத் தயாரிப்பாளரான பீட்டிஆர்னஸ்ட் ( Beate Arnestad) இனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை காண்பிக்கும் முன்னர் இந் நிகழ்ச்சியின் ஒருங்கமைப்பாளர் அங்கு வந்த பல்லின மக்களுக்கும் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை இலங்கையில் தமிழர்கள் எவ்வாறு சிங்கள பேரினவாத அரசினால் அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்பதனையும் மேலும் எவ்வாறு தமிழர்களின் ஆரம்பகால அகிம்சைப் போராட்டம் வன்முறையால் அடக்கி ஒடுக்கப்பட்டது என்பதனையும் பின்னர் எவ்வாறு ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது என்பதனையும் மேலும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தம் எவ்வாறு சர்வதேச காரணிகளினால் முறிவடைந்தது என்பதனையும் இறுதிக்கட்டப் போரில் எவ்வாறு தமிழின அழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதனையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து இத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இத்திரைப்படக் காட்சிக்கு பல்லின மக்களும் வயது வேறுபாடு இன்றி கலந்து கொண்டனர்.