ஐ.நாவுக்கு தகவல் கொடுக்கும் வெளிநாட்டவர் மீது சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் நடவடிக்கை
-
இவ் விடயம் 09. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 12:43க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
இலங்கையின் உள்நாட்டு நிலைமைகள் குறித்த தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு அனுப்பி வைப்பதற்காக குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவலொன்றை அடுத்து, இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் பற்றிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உட்த்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமாக இராணுவப்புலனாய்வு பிரிவின் தலைவர் ஒருவர் விசாரிக்கப்பட்டமை மற்றும் 17 இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன்
தொடர்ந்தும் கேள்வியொழுப்பியதால் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. லசந்த படுகொலை தொடர்பில் இராணுவத்தினர் எவரும் கைதுசெய்யப்படவில்லை என தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையத்தின் பணிப்பாளர் லக~;மன் ஹ_லுகல்ல சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்களை பான்-கீ-மூன் சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த காலங்களில் சீனாவின் சர்வதேச ஊடக வலையமைப்பை பயன்படுத்தி சர்வதேச ரீதியில் இலங்கையின் செயற்பாடுகளை மெச்சும்படியாக மேற்கொள்ளப்பட்ட ஊடகப் பிரசாரங்கள் தற்போது செல்லுப்படியற்று போயுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாது என லக்ஸ்மன் ஹலுகல்ல ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.