தமிழ்க் கட்சிகளுக்குள் புரிந்துணர்வு ஏற்பட்டால் அரசியல் தீர்வுக்கு உதவமுடியும் – நிருபாமா ராவ்

இடம்பெயர்ந்த மக்கள் முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், தமிழ்க் கட்சிகளிடையே புரிந்துணர்வு ஏற்பட்டால் மட்டுமே அரசியல் தீர்வு விடயத்தில் தாங்கள் ஏதோவொரு விதத்தில் உதவமுடியும் என்றும் எடுத்துக் கூறினார். 

புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) பொதுச்செயலர் தி. சிறீதரன் ஆகியோர் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவைச் சந்தித்து, தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நேற்று கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பில் இந்திய வெளியுறவுச் செயலாளருடன் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, உதவித் தூதுவர் விக்ரம், அரசியல் செயலர் சியாம் ஆகியோரும் புதுடில்லியில் இருந்து வருகை தந்திருந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் போது தேர்தல் நிலைமைகள் சம்பந்தமாகவும், வடக்கில் மீள்குடியேற்றங்கள் மற்றும் அகதி முகாம்களின் நிலைமைகள் தொர்பிலும் நிருபமா ராவ், சித்தார்த்தன் மற்றும் சிறிதரன் ஆகியோ,டம் விரிவாகக் கேட்டறிந்து கொண்டார். முக்கியமாக, மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுடைய போக்குவரத்துக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட வேண்டுமென்ற விடய த்தையும் இவர்கள் நிருபமாராவுக்கு எடுத்துக்கூறினார்கள்.

இடம்பெயர்ந்தவர்கள் தமது உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாய உபகரணங்களையும், வாகனங்களையும் இழந்துள்ளதை சுட்டிக்காட்டியதுடன், ஏதோவொரு வகையில் அவர்களுக்கு உழவு இய ந்திரங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் சிலவற்றை அங்குள்ள விவசாய அமைப்புக்களின் ஊடாக வழங்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்கள்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் கொண்டு வரப்படுதல், இட ம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படுதல், தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற புலிகளால் பிடித்துச்செல்லப்பட்ட சிறார்களை விடுவித்தல் என்பன தொடர்பிலும் இந்திய வெளியுறவுச் செயலரிடம் இருவரும் எடுத்துக் கூறி னார்கள்.

தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த நிருபமா ராவ், தமிழ்க்கட்சிகள் இடையே புரிந்துணர்வொன்று ஏற்பட்டால் மாத்திரமே அரசியல் தீர்வு விடயத்தில் தாங்கள் ஏதோவொரு விதத்தில் உதவமுடியும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். இதற்குப் பதிலளித்த சித்தார்த்தன், அப்படியான ஒரு புரிந்துணர்வோ அல்லது ஒற்றுமையோ தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ வரமுடியும் என்றார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.