யுத்தம் நிறைவடைந்து விட்டது எதற்கு அவசரகாலச்சட்டம்: ஜே.வி.பி கேள்வி
-
இவ் விடயம் 09. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 20:17க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
யுத்தம் நிறைவடைந்து 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் அவசர காலச்சட்டத்தை நீடிப்பதற்கான காரணம் என்னவென ஜே.வி.பி.கேள்வி எழுப்பியுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மீண்டும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் ஹந்துன்நெத்தி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
அவசர காலச்சட்டத்தின் கீழ் அநுராதபுரம் சாலிய புரம் முகாம் பாலுமுட முகாம் ஆகியன தடுப்பு முகாம்களாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தின் போது சரணடைந்தவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏன் தடுப்பு முகாம்கள் புதிதாக துவக்கப்படவேண்டும் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
தற்போது சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதம் நடைபெற்றுக்கொண்டுள்ளது.