அவுஸ்திரேலியாவில் பெண் விடுதலைப் புலியா?
-
இவ் விடயம் 09. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 20:20க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
அவுஸ்திரேலியாவில் கிறிஸ்மஸ் தீவில் பெண் விடுதலைப்புலி இருப்பதாக அந்நாட்டு இணையதளம் ஒன்று ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு பகுதியில் இருந்து சட்டவிதிமுறைகளுக்கு மாறாக ஆஸ்திரேலியா சென்ற பலரை அந்நாட்டு அரசு கிறிஸ்மஸ் தீவில் தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
அவர்கள் குறித்த செய்தி வெளியிட்டுள்ள ஆஸ்திரேலியா நாட்டு இணைய தளம் ஒன்று, இரண்டு குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் தீவில் தங்கியுள்ள இலங்கை பெண் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சட்டத்துறையில் பணியாற்றியவர் என்றும் அவர் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குரியவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் அந்த இணையதளம் வெளியிடவில்லை.