சூடான் ஜனாதிபதியைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை

Omar-al-Bashir

Omar-al-Bashir

சூடான் ஜனாதிபதி ஒமர்-அல்-பஸீரை கைது செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.தர்பார் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது போர் குற்றங்கள்,மனிதாபிமான குற்றச் சம்பவங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதால் சூடான் ஜனாதிபதியை கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இப்பிடியாணையை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதியைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அங்குள்ள வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை சூடான் வெளியேற்றியுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.அத்துடன சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இத் தீர்மானத்தை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வரவேற்றுள்ளன.

கடந்த 6 வருடங்களில் சூடானில் இடம்பெற்ற மோதல்களில் 300,000 பேர் பலியாகியுள்ளதுடன் , மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துமுள்ளதாக ஐ.நா. கணிப்பிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.