அவசரகாலச்சட்டத்தை நீக்கினால் 10000 புலிகளையும் வெளியே விடவேண்டிவரும் – மைத்திரிபால

விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டது என்பதற்காக அவசர காலச் சட்டத்தை அவசரப்பட்டு நீக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10,000 விடுதலைப் புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்யவேண்டி வரும். இவ்வாறு தெரிவித்தார்  அமைச்சர் மைத்திரிபால சிறிசேன.

கொழும்பு  மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

அமைச்சர் சிறிசேன அங்கு தொடர்ந்து கூறியவை வருமாறு:

தற்போது நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்கமுடியாது. அந்தச் சட்டத்தின் கீழ்தான் 10 ஆயிரம் புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுக் கொண் டிருக்கின்றனர். அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் விசாரணைகளை நிறைவு செய் யாது இடைநடுவில் அவர்களை விடு தலை செய்யவேண்டிவரும்.

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கிய ஆதரவைப்போல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வழங்கவேண் டும். நாட்டில் பல முக்கிய பணிகளை நிறைவேற்றுவதற்கு நிறைவேற்று அதி காரமிக்க ஜனாதிபதி முறைமை மட்டும் இருந்தால் போதாது. நாடாளுமன்றில் மூன் றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்ட பலமான அரசும் தேவை. அத னால்தான் நாம் மக்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கேட்கின் றோம்  என்றார்.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியதாவது:

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை மேலும் பலப்படுத் துவதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் அர சுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கவேண்டும் என்பதில் மக்கள் தெளிவாகவுள்ளனர். புலி ஆதரவாளர்கள் சர்வதேச மட்டத் தில் மிகவும் கிரமமான முறையில் இலங் கைக்கு எதிராக சதிசெய்கின்றமையை இந் நாட்டு மக்கள் நன்கு அறிவர். அவ்வாறான சதித்திட்டங்களை முறியடிப்பதற்கு அர சுக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வழங்கவேண் டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக் கின்றனர் என்றார் அவர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.