நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான மேலும் சில நாடு வாரியான செயற் குழுக்கள் அறிவிப்பு
-
இவ் விடயம் 11. 03. 2010, (சனி),
தமிழீழ நேரம் 12:35க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புலத்தமிழர் செய்திகள்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அனைத்துலக பெண்கள் நாள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில்,
“விரைவில் அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினூடாக எமது விடுதலைப் போராட்டத்தில் தமிழ்ப் பெண்கள் தமது தலைமைப் பாத்திரத்தை தொடர்ந்தும் வகிக்கும் நிலை உருவாகும் என்பது எமது நம்பிக்கை.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினூடாக எட்டப்பட்டிருந்த பெண்கள் சமத்துவத்தினையும் உரிமைகளையும் பேணிப் பாதுகாப்பதில் நாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.
இதன் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வழிகாட்டிக் கோட்பாடுகள் தமிழ்ப் பெண்கள் நலன்களைப் பேணும் அம்சங்களை முக்கியமாக உள்ளடக்கிய வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன” எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
அத்துடன், மார்ச் மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான மதியுரைக்குழுவின் மீளமைப்புச் செய்யப்படும் அறிக்கை, செழுமைப்படுத்துவதற்கு சற்றுக் கூடுதலான காலம் தேவைப்படுகின்றமையால் அவ்வறிக்கை மார்ச் மாதம்15 ஆம் திகதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்பாடுகளை ஓழுங்கமைத்து மேற்கொள்வதற்காக பிரான்ஸ், நியுசிலாந்து, அவுஸ்ரேலிய ஆகிய மூன்று நாடுகளுக்கான நாடுவாரியான செயற்பாட்டுக் குழுக்களின் விபரங்களும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடுவாரியான செயற்பாட்டுக்குழு:
பிரான்ஸ்
V. மனோகரன்
V. அமலதாஸ்
S. மைந்தன்.
S. கணேசராசா
K. கமலநாதன்
A. அருணகிரிநாதன்
G. பவுஸ்ரின்
R. சாந்திகுமார்
S. மையூரன்
T. நடராசா
S. சின்னப்பொடி
S. ரமணன்
T. சம்புகுமார்
நியுசிலாந்து
சிங்கவரோதயம்
சுந்தரராஜன்
மகாசிவம்
ஜெயபாலன்
சிவா நகுலேஸ்வரன்
அவுஸ்திரேலியா
சண்குமார்
ஏட்ரியன் சின்னப்பு
ஜனனி பாலச்சந்திரன்
டொமினிக் சந்தியாபிள்ளை
ஜோர்ஜ் பரணி
அவுஸ்திரேலியாவுக்கான நாடுவாரியான செயற்பாட்டுக்குழுவின் பட்டியலில் மேலும் பெயர்கள் சேர்க்கப்படவுள்ளன.
மேலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் நடைமுறை தொடர்பாக மக்களுடன் தொடர்ச்சியான தொடர்பாடலை நடத்தும் வகையில்
இதற்கென விசேட கேள்வி – பதில் பகுதியொன்று உத்தியோகபூர்வ இணையத்தளமாகிய www.govtamileelam.org இல் மார்ச் 15 முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கேள்விகளை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இக் கேள்விகளுக்கான பதில்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.