Witness to Survival – CNN இன் ஆவணப்படம் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்
-
இவ் விடயம் 11. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 12:51க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புலத்தமிழர் செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ஆவணப் படமொன்றை தனது ஒளிபரப்புச் சேவையில் காண்பிக்கவுள்ளது.
இத்தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான Sara Sidnerஆல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மறு ஒளிபரப்பு எதிர்வரும் 14ஆம் திகதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவைக்கேற்ப நேர மாற்றம் இடம் பெறலாம் எனவும் CNN அறிவித்துள்ளது..
இலங்கையின் 30 வருட உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களின் குரலாக இந்த ஆவணப்படம் இருக்கும் எனவும், நாம் கற்பனை செய்ய முடியாத பல விவகாரங்களை இந்த ஆவணப்படம் வெளிக் கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது ஏற்பட்ட அதிர்வுளை தமது குடும்பத்தவர்களை இழந்தவர்கள் ஊடாகவும், இடம்பெயர்ந்த மக்களின் ஊடாகவும் பலதரப்பட்ட பதிவுகளை Sara Sidner இந்த ஆவணப்படத்தின் மூலம் வெளிப்படுத்துவார் என நம்பப்படுகின்றது.
குறிப்பாக, இப்போரினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், குடும்பங்கள் பிரிந்தமை, மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டமை மற்றும் உடல், உள ரீதியாக ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இந்த ஆவணப்படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இக்காலகட்டப்பகுதியில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் குறித்தும் இந்த ஆவணப்படம் பதிவு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.