ஆறுமுகன் தொண்டமானுக்கும், வடிவேல் சுரேஸிற்கும் இடையில் மோதல்?
-
இவ் விடயம் 12. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 4:49க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கும், பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஸிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் வடிவேல் சுரேஸ் தம்மீது தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, தமது கட்சிக் காரியாலயம் மீது ஆறுமுகன் தொண்டமானின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலை கண்டிக்கும் வகையில் நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நுவரெலியா தேர்தல் தொகுதியில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் அதேவேளை, அமைச்சர் வடிவேல் சுரேஸ் பதுளை மாவட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.