ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது மற்றும் கொலைஞர்கள் சுதந்திரமாக தப்பிச் செல்வதில் இலங்கை நான்காம் இடம்
-
இவ் விடயம் 12. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 12:05க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
ஊடகவியலாளர்கள் அடிக்கடி கொல்லப்படுவது மற்றும் கொலைஞர்கள் சுதந்திரமாக தப்பிச் செல்லும் சம்பவங்கள் இடம் பெறும் நாடுகள் பற்றி ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு எடுத்த மதிப்பீட்டில் ஈராக், சோமாலியா, சியறாலியோன் ஆகியவற்றை அடுத்து இலங்கை நான்காம் இடத்தை வகிக்கிறது.
ஊடகவியலாளர்கள் கொல்லப்படும் நாடுகளை பொறுத்த மட்டில் இலங்கை 13ஆம் இடத்தில் உள்ளது.
மேற்படி சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய தவறிய நாடுகள் குறித்து எடுக்கப்பட்ட மதிப்பீடு தொடர்பான குழுவின் 2009ஆம் ஆண்டு அறிக்கையில் இலங்கை எந்தவொரு சம்பவம் பற்றியும் விசாரணை செய்து பொறுப்பானவர்களை கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.