தேசியத்தலைவரின் தாயார் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்
-
இவ் விடயம் 13. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 12:47க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரை கனடாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் வசித்து வரும் பிரபாகரனின் சகோதாரி வினோதினி ராஜேந்திரனிடம், அவரது தயாரானா பார்வதிபிள்ளை வேலுப்பிள்ளை அனுப்பி வைக்கப்படவுள்ளார்.
79 வயதான பிரபாகரனின் தயார் பக்க வாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1973ம் ஆண்டில் பிரபாகரனும், தாமும் ஒரே ஆயுதக் குழுவில் அங்கம் வகித்ததாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கும் தமக்கும் இடையில் மிக நீண்ட காலமாக முறுகல் நிலை காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், கடந்த யுத்த நிறுத்த காலத்தில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் 2002ம் ஆண்டில் பிரபாகரனை சந்தித்தாக அவர் தெரிவித்துள்ளார்.