இணையத்தில் வெளிவந்துள்ளது பெருஞ்சித்திரனாரின் தமிழீழம் நூல்
-
இவ் விடயம் 13. 03. 2010, (சனி),
தமிழீழ நேரம் 13:00க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
பாவலலேறு பெருஞ்சித்தனார் அவர்களால் எழுதப்பட்ட ‘தமிழீழம்’ எனும் நூல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழீழத்தைப் பற்றி பாவலலேறு பெருஞ்சித்தனார் அவர்கள் எழுதி தென்மொழியில் வெளிவந்த கட்டுரைகள் மற்றும் குறிப்புக்களைத் தொகுத்து சென்னை பைந்தமிழ்ப் பாசறை புத்தகமாக வெளியிட்டிருந்தது.
பைந்தமிழ்ப் பாசறை தற்போது இயங்காததால் அரும்பெருந் தொகுப்பாகிய இந்நூலை பொள்ளாச்சி திரு.நசனின் உதவியுடன் பைந்தமிழ்ப் பாசறை திரு.தென்னவனுடன் இணைந்து இணையத்தில் வெளிக் கொண்டு வந்துள்ளதாக திரு.மா.பூங்குன்றன் அறிவித்துள்ளார்.
உலகத் தமிழ் மக்கள் அனைவும் பயன் பெறும் வகையில் ‘தமிழீழம்’ எனும் இந்நூலைப் படையலாக்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நூலைப் படிக்க விரும்புகின்றவர்கள் கீழுள்ள இணைப்பை அழுத்திப் பயன் பெறலாம்.
http://www.naalorunool.com/ebooks/13/1300/TM1300.pdf