ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய குற்றம்: நாஞ்சில் சம்பத் சென்னையில் கைது

nangilsampatஇந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில்,   மதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று இரவு சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக மேடை ஏறியபோது அவர் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 1ஆம் தேதி அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.

இதில் மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்ய திருப்பூர் பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நாஞ்சில் சம்பத் சென்னையில் இருப்பதாகவும், அவரை கைது செய்ய திருப்பூர் பொலிஸார் சென்னைக்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று இரவு சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக அவர் மேடையேறியபோது திருப்பூர் பொலிஸார் அவரை கைது செய்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.