மனிதாபிமான உதவிகள் மீதான தடை ஆழ்ந்த கவலையை தோற்றுவித்துள்ளது

e0ae90e0ae95e0af8de0ae95e0aebfe0aeaf-e0aea8e0aebee0ae9fe0af81e0ae95e0aeb3e0af8d-e0ae9ae0aeaae0af88வன்னி பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதில் உள்ள தடைகள் குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனித உரிமைகள் பிரதிநிதி வோல்டர் கலின் தெரிவித்துள்ளார்.  ஜெனீவாவில் கடந்த வாரம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 10 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னி பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதில் உள்ள தடைகள் குறித்து நாம் ஆழந்த கவலை கொண்டுள்ளோம். பொதுமக்களுக்கு உதவிப் பொருட்களும், மனிதாபிமான பணிகளும் சென்றடைவதற்கு தடைகள் அற்ற வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மோதலில் ஈடுபடும் எல்லாத் தரப்பினரும் அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடத்தல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கலின் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதங்களில் சிறிலங்காவுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.