மட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

baticaloமட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தமிழ் பெண் ஒருவர் படையினரின் புலனாய்வு பிரிவினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.  இரண்டு பிள்ளைகளின் தாயான 31 வயதான தம்பாப்பிள்ளை பேரின்பநாயகி என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார். கடந்த சில தினங்களாக மட்டக்களப்பில் தொடர்ச்சியாக கொலைகளும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 14 வயதான சிறுமி பாலியல் அதிரடிப்படையினரால் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்.
 
கடந்த வெள்ளிக்கிழமையன்று பெண்கள் நடவடிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.

அதேவேளை மட்டக்களப்பு வவுணதீவு கன்னன்குடா வீதியில் வைத்து கடந்த சனிக்கிழமையன்று அடையாளம் தெரியாதவர்களால் பொதுமகன் ஒருவர் வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
 
26 வயதான வடிவேல் ரமேஸ்குமார் என்பவரே கடத்திச்செல்லப்பட்டவராவார்.
 
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக கடத்தல்களும் கொலைகளும் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த கடத்தலும் இடம்பெற்றுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.