மாத்தளன் மருத்துவனையையும் வாழ்விடங்களையும் இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல்: நேற்றும் 66 தமிழர்கள் படுகொலை; 154 பேர் காயம்

ca49g5g7சிறிலங்கா அரசாங்கத்தால் ‘பாதுகாப்பு வலயம்’ என அறிவிக்கப்பட்ட மாத்தளன் மருத்துவமனையையும் மக்கள் வாழ்விடங்களையும் இலக்கு வைத்து நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 66 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 154 பேர் காயமடைந்துள்ளனர்.

‘பாதுகாப்பு வலயம்’ என அறிவிக்கப்பட்ட பகுதியான மாத்தளன்  மருத்துவமனையை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 15 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனைக்குள்ளும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அங்கிருந்த நோயாளர்கள் பெரும் இடரினை எதிர்கொண்டதாகவும் மருத்துவர்களும் பதற்ற நிலையில் காணப்பட்டதாகவும் வன்னியில் இருந்து ‘புதினம்’ செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளையில் காயப்பட்டவர்களை ஏற்றுவதற்காக சென்ற முல்லைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிமனையினரின் ஊர்தியும் சேதமடைந்துள்ளது.

மருத்துவர்கள், நோயாளர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பினைத் தேடிக்கொண்டதனால் சிறுகாயங்களுடன் உயிரிழப்பின்றி தப்பியுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில்

சு.கிரிசாந்தன் (வயது 12)

சு.சுபிசன் (வயது 05)

சு.சுவீதா (வயது 03)

ஜெ. ஜெனிஸ்ரா (வயது 07)

செ. ஜெயரூபன் (வயது 19)

ச. சண்முகம் (வயது 50)

ஜெ. ஜென்சிகா (வயது 06)

சிதம்பரநாதன் (வயது 56)

சரணியா (வயது 03)

மிக்கேல்பிள்ளை ஞானேஸ்வரன் (வயது 60)

ஞானேஸ்வரன் கமில்டன் (வயது 20)

திருமூர்த்தி பிரதீபன் (வயது 16)

நாகமுத்து அருள்நேசயோகநாதன் (வயது 65)

ச.விஜரஞ்சிததாஸ் (வயது 26)

அந்தோனி ரேணுகா (வயது 17)

ஆகியோரின் பெயர் விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையோரின் பெயர் விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளையில் மாத்தளன், இடைக்காடு, வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கணை பகுதிகளில் நேற்று முன்நாள் இரவு தொடக்கம் நேற்று பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இரவு-பகலாக மக்கள் வாழ்விடங்கள் மீது தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் நடத்திய இந்த எறிகணைத் தாக்குதல்களில் 51 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 128 பேர் காயமடைந்துள்ளனர்.

கொத்துக்குண்டுகளை சிறிலங்கா படையினர் அதிகளவில் ஏவி வருவதால் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்பட்டு வருவதாக வன்னியில் இருந்து ‘புதினம்’ செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் பரவலாக நடத்தி வரும் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்கள் மக்களின் இடைக்கால வீடுகளுக்கு மேல் வீழ்ந்து வெடிக்கின்றன.

இதனால், அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர் என புதினம் செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார். 

காயமடைகின்றவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் ‘புதினம்’ செய்தியாளரிடம் தெரிவித்துள்ளன.

மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 21 பேரின் உடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பொன்னையா பத்மாவதி (வயது 54)

செல்வம் சிவசோதி  (வயது 34)

ஆறுமுகம் சுரேஸ் (வயது 39)

சுரேஸ் தியாகசோதி (வயது 32)

சுரேஸ் கஜிதரன் (வயது 18)

சுரேஸ் கிருசாந்தன் (வயது 12)

சுரேஸ் சுபீசன (வயது 05)

சுரேஸ் சுபிக்கா (வயது 03)

கண்ணையா றோஸ்மலர் (வயது 36)

கண்ணையா அன்பரசி (வயது 10)

ஆரோக்கியம் சபரியான் (வயது 70)

வேலாயுதம் கிருஸ்ணகுமார் (வயது 31)

கந்தசாமி ரமேஸ் (வயது 22)

செ. ஜெயரூபன்

இராமையா சண்முகம் (வயது 50)

வீரப்பன் நிசாந்தி (வயது 10)

நாகமுத்து கங்காதரன் (வயது 48)

சிவராஜா கலாதீபன் (வயது 13)

கருணாகரசிங்கம் புஸ்பராணி (வயது 27)

ஜெகதீஸ்வரன் ஜென்சிகா (வயது 07)

தங்கவேல் (வயது 70)

கதிராசி (வயது 72)

ஆகியோரின் உடலங்களே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதில் 12 வயது சிறுமியின் உடலம் இதுவரை உறவினா்களால் அடையாளம் காணப்படவில்லை.

மை.திரேசா (வயது 57)

விஸ்வமலர் (வயது 27)

பரமேஸ்வரன் (வயது 30)

தனுசன் (வயது 07)

டயானா (வயது 02)

சாரதாதேவி (வயது 36)

புவனாதேவி (வயது 26)

சின்னக்குமார் (வயது 31)

சி.பரமேஸ்வரன் (வயது 28)

மோ.திவ்யா (வயது 15)

மு.இராஜகுலேந்திரன் (வயது 25)

சி.ஆதீபன் (வயது 06)

அன்ரனியேசுதாஸ் (வயது 30)

செ.இன்பராணி (வயது 36)

த.நிக்சன் (வயது 33)

வே.நிசாந்தினி (வயது 10)

மு.சுஜித்திரா (வயது 26)

ஆ.பரமாயி (வயது 62)

இ.றஜீபன் (வயது 12)

இ.கலையரசன் (வயது 07)

செ.கோகுலன் (வயது 12)

கு.தாசகுமார் (வயது 15)

ச.குணராசா (வயது 52)

ச.கதிராசி (வயது 73)

ம.மதுசன் (வயது 13)

த.தர்மேநதிரன் (வயது 25)

சி.சசிக்குமார் (வயது 33)

ச.சுபாசினி (வயது 32)

பிரியங்கன் (வயது 10)

ச.பிரியங்கா (வயது 06)

சி.பானுவன் (வயது 07)

கெ.மஞ்சுளா (வயது 30)

செ. ஜெகதீஸ்வரி (வயது 39)

கரிசாலன் வயது (02 வருடங்கள் 05 மாதங்கள்)

க.துரைராசா (வயது 61)

ர.சறோஜினிதேவி (வயது 36)

ர.பிரியங்கன் (வயது 10)

பா.தனுசன் (வயது 14)

சு.தங்கம்மா (வயது 67)

ம.திலகம்மா (வயது 65)

ம.சந்திரமோகன் (வயது 46)

பொ.மீனாட்சி (வயது 56)

ச.நகுலேஸ்வரன் (வயது 49)

ந.பரமேஸ்வரி (வயது 55)

ப.கமலாதேவி (வயது 58)

சி.ராஜன் (வயது 31)

க.சுகன்ஜா (வயது 14)

பு.கிருஸ்ணகுமாரி (வயது 33)

எழில்மதி வயது (06 மாதங்கள்)

செ.சிவயோகம் (வயது 60)

த.ஜெயதேவி (வயது 28)

ந.சரஸ்வதி (வயது 58)

க.மீனாட்சிப்பிள்ளை (வயது 88)

த.பத்மாவதி (வயது 47)

செ.தியாகராசா (வயது 72)

சி.செல்வராணி (வயது 53)

ந.புஸ்பராணி (வயது 39)

செ.சரண்ஜா (வயது 14)

செ.சிதம்பரநாதன் (வயது 58)

சி.சிவரூபன் (வயது 29)

அ. சாந்தாஜினி (வயது 48)

சு. மகேஸ்வரன் (வயது 42)

ஜெ.ஜெனிஸ்ரா (வயது 03)

சந்திராதேவி (வயது 51)

ச.சஞ்சீவன் (வயது 12)

ச.ஜெயதீபன் (வயது 10)

த.மோகன் (வயது 14)

இ.நிதர்சன் (வயது 10)

த.ராஜா (வயது 28)

ந.செல்வராணி (வயது 59)

கி.பிரதீபன் (வயது 16)

சு.லோறன்ஸ் (வயது 16)

ப.பிறேமலா (வயது 28)

சி.விஜயன் (வயது 23)

க.பஞ்சாட்சரம் (வயது 46)

ஜெயசீலன் (வயது 32)

சீதாலட்சுமி (வயது 44)

சி.செபஸ்ரியான் (வயது 29)

கி.நிருஜன் (வயது 10)

சி.ஜெயலட்சுமி (வயது 44)

ம.பொன்னாபூசனம் (வயது 69)

சி.நல்லையா (வயது 66)

சி.கலிஸ்ரன் (வயது 13)

மிறோஸ்சன் (வயது 16)

ம.மதியாபரணம் (வயது 58)

ச.ராதிகா (வயது 16)

வி.திருமலை (வயது 28)

அ.சிவகுமார் (வயது 34)

ப.பகீர்தன் (வயது 12)

ந.பவித்தாராணி (வயது 10)

சி.முகுந்தன் (வயது 30)

செ.முகுந்தன் (வயது 24)

கா.ரங்கநாதன் (வயது 48)

ந.மோகதாஸ் (வயது 23)

சோ.கோதரசன் (வயது 40)

சி.மாலினி (வயது 36)

தே.குலேந்திரன் (வயது 28)

ம.மயூரன் (வயது 12)

ச.சந்திரகுமார் (வயது 30)

ஜெ.சங்கவி (வயது 04)

க.சாதுசன் (வயது 14)

ஜெ.தயாபரன் (வயது 30)

த.சுசி (வயது 27)

ஆ.நகுலேஸ்வரன் (வயது 25)

கோ.ஜீவநேசராணி (வயது 29)

கு.மதிவதனன் (வயது 07)

கணேசமூர்த்தி (வயது 57)

பெ.சிங்கன் (வயது 37)

பே.நிசாந்தினி (வயது 13)

கு.மேரிஸ்நாயகி (வயது 45)

சா.வசந்தன் (வயது 26)

கா.தேவர் (வயது 68)

சி.விஜயகுமார் (வயது 33)

ப.மங்களசொந்தரி (வயது 27)

சு.ஜெயரட்ணம் (வயது 46)

ம.சபாரட்ணம் (வயது 40)

சு.பிரியதர்சினி (வயது 23)

பெ.சூரியகுமார் (வயது 31)

ஆகியோர் காயமடைந்துள்ளனர். ஏனையோரின் பெயர் விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.