விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) சார்ந்தோர் தற்போது ஆயுதங்களை கையளிக்க மாட்டார்கள்: பேச்சாளர் கமலநாதன்

karuna20and20pillayan_0தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை களைந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனை சார்ந்தவர்கள் தமது ஆயுதங்களை தற்போதைக்கு களைய மாட்டார்கள் என தெரிய வருகின்றது.

“தங்களைச் சார்ந்த சுமார் 3000 பேர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாகவும், அவர்கள் உறுப்பினர்களாக அங்கத்துவம் பெறும் வரை ஆயுதங்களை வைத்திருப்போம்” என்றும் அவர்களைச் சார்ந்த பேச்சாளரான தட்சணாமூர்த்தி கமலநாதன் தெரிவிக்கின்றார். “அச்சுறுத்தல்கள் இருக்கும் போது ஆயுதங்களை கையளிக்க முடியாதுள்ளது. கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் செயல்படும் சில குழுக்களினால் இன்னும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.இதன் காரணமாகவே தற்போதைக்கு ஆயுதங்களை களையக் கூடிய சூழ்நிலை இல்லை “என்றும் அவர் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.