பிள்ளையானின் கப்பம் பெறும் வீதம் அம்பலம்

mahi-pillayanதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையானினால் நிர்வாகம் செய்யப்படும் கிழக்கு மாகாணத்தில் பாரியளவு கப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்த போதிலும் மக்களிடம் கப்பம் கோரும் நடவடிக்கைகைள நிறுத்தவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

பொதுமக்களிடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கப்பம் பெற்றுக் கொள்வதாக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவித்த போதிலும், அதனைக் கண்;டு கொள்ள வேண்டாம் என மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு போத்தல் சாராயத்திற்கு 60 ரூபா, ஒரு போத்தல் பியருக்கு 20 ரூபா, நாளொன்றுக்கு 5 வீதம் முச்சக்கர வண்டி உரிமையாளர்களிடம் அறவிடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் ஒப்பந்தகாரர்களின் பெறுமதியில் பத்து வீதம், தனியார் வகுப்பு ஆசிரியர்களின் மொத்த வருமானத்தில் 10 வீதம், மெத்த சில்லறை வியாபாரிகளிடம் 10 வீதம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டாய வரிப் பட்டியல் நீண்டு கொண்டு செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் முதல் மீன்பிடித் தொழிலாளர்கள் வரையில் சகல தரப்பினரிடமும் கட்டாய வரி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கட்டாய வரி அறவீட்டின் மூலம் கிழக்கு மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.