அப்பாவி அகதிகளை வைத்து அரசாங்க உயரதிகாரிகள் வியாபாரங்களை நடத்தி லாபமீட்டுகின்றனர்

tn_risathவன்னியில் யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்கியத் தவிக்கும் அப்பாவிச் சிவிலியன்களைப் பயன்படுத்தி தங்களது வர்த்தக நோக்கங்களை பூர்த்தி செய்து சில அரசாங்க தரப்பினர் லாபமீட்டுவதாக ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியூதீனின் இளைய சகோதரர் அகதிகளுக்கான தற்காலிக குடில்களை அமைக்கும் நடவடிக்கையின் மூலம் கொள்ளை லாபமீட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க ஒப்பந்தத்தின் ஊடாக குறித்த அமைச்சரின் சகோதாரர் இந்த லாபத்தைப் பெற்றுக் கொள்வதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இதேவேளை, வடக்கு மாகாண ஆளுனர் டிக்சன் தலோ பண்டாரவிற்கும் அரசாங்க ஒப்பந்தமொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதன் மூலம் அவர் கொள்ளை லாபமீட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
வவுனியாவில் புதிய இடைத்தங்கல் முகாம்களை அமைப்பதற்கான காடழிப்பு நடவடிக்கைளை தலே பண்டார மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இது தொடர்பாக அமைச்சர் ரிசாட் பதியூதீனை தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததாகவும், தலா பண்டார குறித்த ஒப்பந்தத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.