3,30,000 பேரில் 30,000 பேருக்கு உணவு கிடைக்கின்றது. ஏனையோர் பட்டினியில்

vanni_outமுல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கியுள்ள 81,000 குடும்பங்களைச் சேர்ந்த 3,30,000 பேரில் 30,000 பேருக்கு மாத்திரம் உணவுப் பொருட்கள் கிடைப்பதாகவும் ஏனையோர் பட்டினியால் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் தோட்டக் கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுக்களின் செயலாளர்க்கு கடந்த வியாழன் அன்று உணவுப் பற்றாக்குறை தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தினமும் உணவு தொடர்பாக கோரிக்கை விடுத்துவருவதாகவும் அதற்கு பதில் கொடுக்க முடியவில்லை. சிறார்கள், கர்ப்பணித் தாய்மார், வயோதிபர்கள், உணவுயின்றி மிகவும் பரிதாபமாக பசியினால் வாடுகின்றார்கள். இவர்கள் மிக விரைவில் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வன்னியில் ஏற்பட்டுள்ள பட்டினியை போக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இதேவேளை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி திவாரெட்ணவுடன் தெரிவிக்கையில் 35,000 பேர் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளதாகவும், 70,000 பேர் மாத்திரம் அங்கு தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கான உணவுப் பொருட்கள் அனுப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி பார்த்தாலும் 70,000 பேருக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் 30,000 பேர்க்கு மாத்திரமே போதுமானதாக உள்ளது என மேலதிக அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் வன்னியில் கடந்த வாரங்களில் சிறார்கள் உட்பட 13 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக பிராந்தி சுகாதாரப் பணிப்பாளர் தனது அறிக்கையில் அரச அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.