உணர்ச்சிக் குரல் எழும்பும்வரை இதயம் துடிக்கும்: ஒரு ஈழத்தமிழ்மகனின் வேண்டுகோள்

d-writingஒரு ஈழத் தமிழ்மகனின் கனத்த இதயத்திலிருந்து வெளிவந்த உள்ளக் குமுறல்களை இங்கே தமிழீழ மக்களிடம் வேண்டுகோளாக விடுத்திருக்கின்றார்.

என் இனிய உறவுகளே!

என் இளைய வயதில் எமது தலைவரின் இன ஒழிப்பு போராட்டத்தால் மனதில் ஏற்பட்ட தவறான வினாக்கள் பல இருப்பினும் சில கணங்கள் அவை சரியானதாகவே இருக்கும். இப்படியான சிந்திப்பிற்கு காரணமும் இன அடக்குமுறைதான் என்பதும் இப்போதுதான் புரிகிறது.

எமது உறவுகள் என்றும் அடிமை என்பதை பல முறை நாம் எல்லோரும் சிங்களவனின் அடாவடித்தனத்திலிருந்து பார்த்திருக்கிறோம். அந்நிய நாட்டில் சகல வசதிகளுடனும் வாழுகின்ற என் உறவுகளே! என்னைப் போல் உங்களின் மனதிலும் பல தவறான வினாக்கள் எழுந்திருக்கலாம் காரணம் ஒவ்வொரு நாளும் எம்மை சுற்றி எம் வன்னி உறவுகளைச் சுற்றி என்ன நடப்பதென்று தெரியாத அறியாமையே.

பல அழிப்புக்கள், அடக்குமுறைகள் என்பன நடந்தாலும் கற்பழிப்பிலிருந்து கருக்கலைப்புவரை தாண்டி விட்ட பிறகும் தமிழன் என்ற இனத்தை உடையவர்களாக இருந்து இவைகளை இனிமேலும் பார்த்துக்கொண்டிருப்பது எம்மை நாம் செருப்பால் அடிப்பது போல் தோன்றும்.

நான் பெரிது நீ பெரிது என்று வாழாது நாடு பெரிதென்று வாழ்ந்தால் நாமெல்லாம் அவைக்கு சிறியவை ஆகி விடுவோம் என்று அண்ணர் கூறியது போல நாம் எல்லோரும் செயற்படவேண்டும். நாளுக்கொருமுறை LANKASRI எனும் இணையதளத்திற்கு விஜயம் செய்து நடப்பவையை பார்த்தீர்களானால் உங்களுடைய தவறான வினாக்களுக்கும் விடை தெரியும்.

மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் மக்களே!

நானும் இந்த இடத்திற்க்கு உரிமையானவன். இருப்பினும் கருணா எனும் ஒரு கொடிய நோய்க்கு மருந்தில்லாமல் நாமெல்லாம் தவிப்பது கேவலம். ஜோசப் பரரஜசிங்கத்திலிருந்து, ஜெயனந்தமூர்த்திவரை மட்டக்களப்புத்தான். இவர்களின் குருதியும் எம்மைப் போன்ற தமிழ் குருதிதான். நானும் கருணாவின் செயற்பாட்டை அறியாது அடக்கப்பட்டேன் இருந்தாலும் என் தமிழ் இனத்தின் மேல் உள்ள பாசத்தால் மிகவும் குறுகிய காலத்தில் இவனுடைய தேசத்துரோகம் விளங்கியது.

மீண்டும் எம் தமிழ் அமைப்பிடம் என்னால் இயன்ற உதவியை கேட்க்கும்படி கேட்டிருந்தேன் மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டு என்னுடைய பங்களிப்பையும் ஆற்றினேன். நாங்கள் எல்லோரும் ஒரே இனத்தவர்கள் என்பதை மறந்து விடாது சகலரும் ஒன்றிணையவேண்டும். எம் மக்களின் விடியலை வென்றெடுக்கவேண்டும்.என கேட்டுக்கொள்கின்றேன்.

உணர்ச்சிக் குரல் எழும்பும்வரை இதயம் துடிக்கும்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.